பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் | திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படுவதற்கு வைகறை 3-40 மணிக்கு இராமேசுரம் வண்டியின் உருளைகள் அரைமணி நேர ஓய்வுக்குப் பின் ஆயத்தமாயிருந்தன. அந்தப் புகைவண்டி அங்கு வந்து நின்றிருந்த அரைமணி நேரத்தில் எத்தனையோ பேர் இறங்கினர் - ஏறினர். வண்டி நின்றால் ஒடுபவர்களும் வண்டி ஓடினால் நிற்பவர்களுமாகிய கைத்தட்டு வணிகர் களின் ஆட்சி பரபரப்புடன் நடந்தது. வண்டி புறப்படும் நேரம் - நெருங்கியதும் சிறிது சிறிதாக எல்லா ஆரவாரங்களும் அடங்கத் தொடங்கின. இந்த நெருக்கடியான நேரத்தில் ஒரு பெரியவர் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு இரண்டாவது வகுப்புப் பெட்டியை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். முதல் ஊதலைத் தொடர்ந்து இரண்டாவது ஊதலும் முடிந்து விட்டது. சோம்பல் முறித்துக் கொண்டு வண்டியின் உருளைகள் அசையத் தொடங்கும் நேரம் அது. சாத்தியிருந்த இரண்டாவது வகுப்புப் பெட்டியின் கதவைப் பெரியவர் திறக்கிறார் - முடியவில்லை. பின்னர் அந்தப் பெண் திறக்க முயலுகிறாள் - அவளுக்கும் கதவு திறந்து கொள்ள மறுத்து விட்டது. அப்போது உள்ளே யிருந்த ஒர் இளைஞர் வந்து கதவைத் திறந்து விடுகிறார். அந்தப் பெண் வண்டியில் ஏறிக் கொள்கிறாள். பெரியவர் இளைஞருக்கு நன்றி சொல்கிறார். இந்த நிலைமை