பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய பரிசுகள் புதினங்கட்கே கொடுக்கப்படுவதால், புதினங்கள் சிறந்த படைப்பிலக்கியங்களாகக் கருதப்படுவ தையும் உணர்ந்தேன். ஆனால், யான் எந்தப் பரிசுக்காகவும் இந்தச் சிறிய புதினத்தை எழுதி வெளியிடவில்லை. புதினம் எழுதுபவர்கள் ஆய்வு நூல் எழுதுபவர்களை ஒருவிதமாகப் பார்ப்பதையும், ஆய்வு நூல் எழுதுபவர்கள் புதினம் எழுதுபவர்களை ஒரு விதமாகப் பார்ப்பதையுங் கூட சொந்தப் பட்டறிவினால் கண்டேன். யான் நல்ல தமிழ் ஆராய்ச்சியாளன் எனப் பெயர் பெற்றவன். ஆனால், இந்தப் புதின நூலுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்பது இனிமேல்தான் தெரியும். 1961ஆம் ஆண்டு கால வாழ்வியல் நடைமுறைக்கு ஏற்ப எழுதப் பெற்ற இந்த நூற்கருத்துகளைப் பெரும்பாலும் அந்த ஆண்டு காலக் கண்கொண்டே காண வேண்டுகிறேன். நன்முறையில் இந்த நூலை அச்சிட்டு உதவிய சிதம்பரம் சபாநாயகம் பிரிண்டர்ஸ் உரிமையாளர்க்கு என் நன்றி உரியது. சுந்தர சண்முகன் 5–9-1990