பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சுந்தர சண்முகனார் 7 சில வாரங்கள் சென்றதும், சென்னைக் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஒப்புக்கொள்ளும்படி அறவணனுக்கு ஆணை வந்தது. எதிர்பாரா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் அவர் அவ்வேலையை ஏற்றுக்கொண்டார். சென்னைக் கல்லூரியில் சிறப்புடன் தமிழ்ப்பணியாற்றி வந்தார். கல்லூரி தொடர்பான பணிகளுக்கிடையே, ஞாயிற்றுக் கிழமைகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கட்குச் சென்று அறிவுப் பசியை அடக்கி வரவேண்டுமென்பது அறவணனது பேரவா. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மகாபலிபுரம் சென்றுவரத் திட்டமிட்டு, சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பேருந்து வண்டி புறப்படும் இடத்தை அடைந்தார். - வண்டி புறப்பட இன்னும் சிறிது நேரம் இருந்தது. அவ்வமயம் பெண்டிர் இருவர் அவ்வண்டியில் ஏறிக் கொண்டிருந்தனர். இருவருள் ஒருவர் இளம்பெண்; மற் றொருவர் ஒரளவு வயதானவர். அந்நேரம் ஒரிளைஞன் இரைக்க இரைக்க ஓடிவந்து, வயதான அம்மையாரை நோக்கி, அம்மா அம்மா! வேலூரில் தாத்தாவுக்கு உடம்பு மிகவும் கடுமையா யிருப்பதாகத் தந்தி வந்திருக்கிறது. அப்பா உங்களை உடனே புகைவண்டி நிலையத்திற்கு அழைத்துவரச் சொன்னார். நீங்கள் மகாபலிபுரம் போக வேண்டாம் - என்று பதட்டத்துடன் சொன்னான். உடனே அந்த அம்மையார் தன்னுடன் இருந்த இள நங்கையைப் பார்த்து, நீங்கள் மகாபலிபுரம் போய் வாருங்கள். புறப்பட்ட பயணத்தை நிறுத்த வேண்டாம். நான் வேலூருக்குப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார். அதற்கு அவ்விள