பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 79 நங்கை, நான் மட்டும் தனியாக எப்படிப் போய்வர முடியும்? இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம். நான் வேறு வண்டி பார்த்து என்வீடு போய்ச் சேருகிறேன்! என்று சொன்னாள். சரி உங்கள் விருப்பம்' என்று சொல்லி அந்த அம்மையார் மகனுடன் புறப்பட்டு விட்டார். இளநங்கையோ செய்வதறியாது சில விநாடிகள் திகைத்தாள். அப்போது அங்கு வந்து நின்ற அறவணனைத் தற்செயலாய் அந்நங்கை கண்டு நீங்களா? என்று பெரு வியப்புடன் கேட்டாள். அறவணனும் இந்தச் சந்திப்பை எதிர்பார்க்கவேயில்லை. அன்றில் அங்கு வந்திருப்பாள் என்று அவருக்கு எப்படித் தெரியும் அறவணன் ஆவலுடன் பேச்சு தொடங்கினார். 'நீங்கள் மகாபலிபுரம் புறப்பட்டீர்களா?' 'ஆமாம்! அதுவும் தடைப்பட்டுவிட்டது. துணையாக வந்த அந்த அம்மா ஏதோ தந்தி வந்ததாக ஆள் வந்ததால் போய்விட்டார்கள். தனியாக நான் எப்படிப் போவது? முன்பு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, மகிழ்வுச் செலவாக (Excursion) ஒரு நாள் மாணவிகளை மகாபலிபுரம் அழைத்துப் போக ஏற்பாடாகியிருந்தது. அந்த நாள் பார்த்து எனக்கு உடல் நலமில்லாததால் நான் போகாமல் நின்று விட்டேன். பிறகு, போகவேண்டும். போகவேண்டும் என்று இப்படியே தள்ளிக்கொண்டு வந்து விட்டது. அன்றைக்குத்தான் அப்படியென்றால், இன்றைக்கு இப்படியாகிவிட்டது' 'ஏன், அந்த அம்மா வராவிட்டால் நீங்கள் மட்டும் போய் வர முடியாதா? வண்டியில்தான் எவ்வளவோ பேர் துணைவருகிறார்களே' இருந்தாலும் தக்க துணையின்றி எப்படி நான் தனியாகப் போய் வருவது?"