பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சுந்தர சண்முகனார் 'மன்னிக்க வேண்டும் நானும் மகாபலிபுரம் போவ தற்குத்தான் வந்திருக்கிறேன். என்னுடன் வர உங்களுக்குத் தடை இல்லையென்றால் வரலாம், நேரமாகிறது, விரைவில் சொன்னால் இரண்டு பயணச் சீட்டுகள் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறிவிடலாம்'. 'பயணச் சீட்டுகள் புதிதாக வாங்க வேண்டியதில்லை. நாங்கள் இருவரும் முன்னமேயே வாங்கிக்கொண்டுதான் வண்டியில் ஏறத்தொடங்கினோம் அந்த அம்மாதான் திடீரெனப் போய் விட்டார்களே. இரண்டு பயணச் சீட்டு களும் இதோ என்னிடந்தான் உள்ளன.' சரி நல்லது! உங்கள் முடிவு என்ன? வண்டி புறப் படும் நேரம் நெருங்கிவிட்டதுபோல் தெரிகிறது. ஏறிக் கொள்ளலாமா?

  • * י 3 ק o-or- 参臀举 4 * * * а в Ф هeج

ஏன் தயங்குகிறீர்கள்! விரைவில் சொல்லுங்கள்". சரி புறப்படுவோம்' ஒருவிதமாக அறவணனும் அன்றிலும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டிக்குள் இருவர் இருவராக அமரும் இருக்கைகள் சில இருந்தன. அவற்றுள் ஒன்றைச் சுட்டிக்காட்டி அதில் அமரும்படி வண்டியின் வழிசெலுத்தி (கண்டக்டர்) சொன்னார். அன்றிலும் அறவணனும் ஒரே இருக்கையில் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கி இணையாக அமரச் சிறிது தயங்கினர். உடனே சற்று வயதான அவ் வழி செலுத்தி, இருவரையும் நோக்கி கணவனும் மனைவியும் ஒன்றாய் உட்காரவா இவ்வளவு வெட்கம்! பார்த்தால் இந்தக் காலத்து நாகரிகம் உடையவர்களாகத் தெரிகிறது.ஆனால் இவ்வளவு கூச்சப்படுகிறீர்களே!-என்று ஒரு போடு போட்டார். அதற்குள் வண்டி உலுக்கல் .