பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 81 குலுக்கலுடன் புறப்பட்டு விட்டது. அந்த உலுக்கல் - குலுக்கலானது, அறவணனையும் அன்றிலையும் எதிர்பாரா வகையில் இடித்து மோதிக் கொள்ளச்செய்து இருக்கையில் தள்ளிவிட்டது. வண்டி போய்க் கொண்டிருந்தது. வழியில் இருவர்க்கிடையே பேச்சு மிகுதியாக எழவில்லை. வண்டி செங்கற்பட்டு வழியாகத் திருக்கழுக்குன்றத்தை நெருங்கியது. திருக்கழுக்குன்றம் வரையிலுமே பயணச்சீட்டு எடுத்திருப்ப தாக அன்றில் அறவணனிடம் தெரிவித்தாள். வண்டி திருக்கழுக்குன்றத்து மலையடிவாரத்தில் வந்து நின்றதும் இருவரும் இறங்கிக் கோண்டனர். மலையுச்சிக்குச் சென்று 'கழுகு வழிபாடு கண்டுவிட்டு, நண்பகல் உணவைக் கழுக்குன்றத்திலேயே முடித்துக்கொண்டு பின்னர்ப் பிற்பகல் வண்டியில் மகாபலிபுரம் செல்வதே அனைவர்க்கும் வழக்கம். உயர்ந்த புலவர்களின் இலக்கியங்கள்போல் ஆழமுடைய தடாகங்களும் பெரியோரின் உள்ளம்போல் உயர்ந்த மலை யுச்சியும் திருக்கழுக்குன்றத்திற்குத் தனியழகு தருபவை. மலைச் செடிகொடிகளிடையே தோய்ந்து வரும் மென் காற்றும், மலையடிவாரத்து இன்சுவைத் தண்ணிரும் உடல் சோர்ந்தோர்க்கும் உள்ளம் சோர்ந்தோர்க்கும் மாநலம் பயப்பவை. ஆனால், இரவில் மட்டுமல்ல - பகலிலுங்கூட, படுப்பதற்கு மட்டுமல்ல - உட்கார்ந்திருப்பதற்குங் கூட, திருக்கழுக்குன்றத்தில் கொசுவலை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மறக்க முடியாது. அறவணன், அன்றில் இருவருமே திருக்கழுக்குன்றமோ மகாபலிபுரமோ இதுவரை பார்த்ததில்லையாதலின், மிகவும் ஆவலுடன் மலையுச்சியை நோக்கி ஏறத் தொடங்கினர். கால்கள் ஏறுகின்றன. வாய்களும் பேசுகின்றன. " வண்டியில் பலர் இருந்ததால் ஒன்றும் பேச முடிய வில்லை. உங்களுடன் ஒர் அம்மா வந்து திரும்பிப் போய்