பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சுந்தர சண்முகனார் விட்டார்களே - அவர்கள் யார்? நீங்கள் எப்போது சென்னைக்கு வந்தீர்கள்?" 'நான் சென்னைக்கு வந்து ஒரு திங்கள் ஆகிறது. சென்னை மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை வேலை கிடைத்திருக்கிறது. இப்போது அவ்வேலைதான் பார்த்து வருகிறேன். என்னுடன் வந்த அம்மாவும் எங்கள் கல்லூரியில்தான் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வரலாற்றுப் பேராசிரியை, பெயர் நீலாம்பிகை அம்மையார். அவர்களின் துணையுடன் திருக்கழுக்குன்றமும் மகாபலி. புரமும் பார்த்துவிடலாம் என்று புறப்பட்டேன். வந்த இடத்தில் உங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது'. 'அப்படியா! நீங்கள் மகளிர் கல்லூரியில் வேலை பார்ப்பதே எனக்குத் தெரியாதே! மிக்க மகிழ்ச்சி! நாம் முன்பு அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வேலைக்காக நேர்முகக் காட்சித் தேர்வுக்காக வந்தோமே - அந்த வேலை எனக்குக் கிடைத்துவிட்டது. இப்போது நான் அந்தக் கலைக்கல்லூரியில்தான் வேலைபார்த்து வருகிறேன். உங்களுக்குத் தெரியுமோ-தெரியாதோ!'. எனக்கு அது தெரியும். ஆனால் உங்களுக்கு ஒரு விவரம் தெரியுமோ-தெரியாதோ?’, என்ன அது?’’ 'நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை முதலில் எனக்குத்தான் கிடைத்தது. இரண்டு வாரத்தில் வந்து வேலையை ஒப்புக்கொள்ளும்படி எனக்கு ஆணையும் வந்து விட்டது. பின்னர் நெருக்கத்தில் ஒரு விவரம் கேள்விப் பட்டேன்; அரசிதழிலும் (gazette) படித்துப் பார்த்தேன்.' என்ன விவரம் அது?’’ வேலைக்கு என்னைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். நான் வேலையை ஒப்புக் கொள்ளவில்லையென்றால்,