பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 87 ஏன் ஒருவர்க் கொருவர் எட்டிச் செல்கிறீர்கள்? எங்களைப்போல் கைகோத்து இணைந்து செல்லலாமே! இந்தக் காலத்திலும் - அதிலும் படித்தவர்கட்குள்ளும் இவ் வளவு கூச்சமா?’’ என்று கூறிக்கொண்டே, இளநம்பி அறவணன் கையை யும், இளநங்கை அன்றிலின் கையையும் பிடித்து இழுத்து வந்து இணையச் செய்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பேருந்து வண்டி அங்கிருந்து புறப்படத் தொடங்கியது. அதைக் கண்ட நம்பியும் நங்கையும், எங்கள் வண்டி புறப் படுகிறது. நாங்கள் வருகிறோம். வணக்கம்' என்று கூறித் தாங்களாகவே விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். அங்கிருந்த சிறுவர் - சிறுமியர் இந்தக் காட்சியை ஒரு நாடகம்போல் கண்டு களித்துச் சுவைத்துக் கொண்டிருந் தனர். அறவணனும் அன்றிலும் அவ்விடத்தை விட்டு மெல்ல நழுவத் தொடங்கினர். அன்றில் அழாக் குறையாய் ஏன், உள்ளுக்குள் அழுது விட்டாள் என்றே கூறலாம்போல் கண் கலங்கிய நிலையில் துவண்டு தள்ளாடி நடவாமல் நடந்து கொண்டிருந்தாள். அளவு மீறிய மான உணர்வு அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. திடீரென வந்த இருவர் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதற்காக நாணத்தின் உயர் எல்லைக்கோட்டில் நின்று நடுங்கிக்கொண்டிருக்கும் அன்றிலை ஏறிட்டுப் பார்க் கவும் அறவணனுக்கு அச்சமாயிருந்தது. அந்த நிலையில் அவர் அவளோடு பேசுவது எப்படி? தன்னுடன் வர நேர்ந்த தனால்தான் அவளுக்கு இந்தக் கெட்ட பெயர் வந்தது என்பதாக அவள் எண்ணித் தன்னை வெறுப்பாளோ என்னவோ என எண்ணி அறவணன் மிகவும் தொல்லைப் பட்டார்.