பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சுந்தர சண்முகனார் 3 பேருந்து வண்டி மகாபலிபுரம் சேர்ந்ததும் அறவண னும் அன்றிலும் இறங்கி நடக்கத் தொடங்கினர். அப் போது அங்கே அவர்கள் முதலாவதாகக் கண்டகாட்சி, ஓர் இள நம்பியும் ஒர் இள நங்கையும் கைகோத்துக் கொண்டு வந்த கவின் பெறு காட்சியே! . இள நம்பி அறவணனைக் கண்டதும் அலோ மிஸ்டர் அறவணன் என்று கூறிக் கை குலுக்கினான். இள நங்கை வணக்கம் கூறி அன்றிலைத் தழுவிக் கொண்டாள். இந்த இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்கள். மகிழ்வுச் செலவாக மகாபலிபுரம் காண வந்துள்ளனர். இள நம்பிக்கு அறவணனைத் தவிர அன்றிலைத் தெரியாது; அதுபோலவே, இள நங்கைக்கு அன்றிலைத் தவிர அறவணனைத் தெரியாது. இள நம்பியும் அறவணனும் கல்லூரியில் சேர்ந்து படித் தவர்கள். அவ்வாறே, இள நங்கையும் அன்றிலும் ஒரு கல்லூரியில் படித்தவர்கள். பழைய நட்பினால் அவன் அறவணனையும் அவள் அன்றிலையும் நலம் வினவினர். "அறவணா எனது திருமண் அழைப்பிதழ் உனக்கு வந்து சேர்ந்திருக்கும் என நம்புகிறேன். நீ ஏன் என் திருமணத்திற்கு வரவில்லை? போனால் போகிறது. உனது திருமண அழைப்பிதழாவது எனக்கு அனுப்பியிருக்கக் கூடாதா? நண்பர்களுக்குக்கூட தெரிவிக்காமல் திருமண்ம் செய்து கொண்டிருக்கிறாயே! தெரிவித்தால் திருமண விருந்திற்கு வந்துவிடுவோம் என்ற அச்சமா?" . - என்று இளநம்பி அறவணனை நோக்கிக் கேட்டுக் கேலி செய்யலானான். அவ்வாறே இள நங்கையும் அன்றிலைக் கேட்டுக் கேலி செய்தாள்.