பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 85 கழுகுகளோ கொஞ்சத்தில் வந்தபாடில்லை. ஓர் ஐயர் குறிப்பிட்ட ஒரு பாறையில் அமர்ந்து சோறும் தண்ணீரும் வைத்துக்கொண்டு, கழுகுகளின் வரவை நோக்கி, எதிர்க் குன்றின் பக்கம் வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார். மக்களின் ஆவலைத்துண்டுவதற்காகவோ என்னவோ கழுகுகள் வரவேயில்லை. ஆனால் எதிர்க் குன்றில் கழுகுகளின் நடமாட்டம் பலர் கண்களுக்குத் தெரிந்தது. ஐயர் கழுகுகளை அழைக்கும் நோக்குடன் அவை இருக்கும் பக்கமாகத் துணியால் விசிறினார்; ஒரு தட்டைக் கல கல வென்று தட்டி ஒலியெழுப்பினார். இந்நிலையில் ஒரு கழுகு மெல்லப் பறந்துவந்து ஐயர் இட்ட உணவில் சிறிது உட்கொண்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு கழுகும் வந்து அதனுடன் பங்கு கொண்டது. சிறிது நேரத்தில் இரண்டு கழுகுகளும் பழைய இடம் நோக்கிப் பறந்து சென்றன. உடனே மக்கள், கழுகுகள் உண்டு எஞ்சிய உணவைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அங்கே ஒரு சிலரால் மக்களுக்குத் தண்ணீர் (தருமம்) அறமும் நீர்மோர் அறமும் செய்யப்பட்டன. அங்கே தென்னாட்டு மக்களைக் காட்டிலும் வடநாட்டு மக்களே அன்று மிகுதியாகக் காணப்பட்டனர். அன்றிலும் அறவணனும் எல்லாவற்றையும் மகிழ்வுடனும் வியப்புடனும் பார்த்துவிட்டு மலையினின்றும் இறங்கி ஊரை அடைந்தனர். ஒர் உணவுக் கடையில் உணவு கொண்டனர். உடனே புறப்பட்ட ஒரு பேருந்து வண்டியில் ஏறி மகாபலிபுரம் போய்ச் சேர்ந்தனர்.