பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சுந்தர சண்முகனார் கடக்கத் தொடங்கியவர்கள் போலக் கழுக்குன்றத்து மலைப் படிகளைக் கடந்து உச்சியை அடைந்தனர். அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் கழுகுக் காட்சிக்காகக் காத்திருந்தனர். கழுகு வழிபாட்டுக்காட்சியைப் பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகப் பேசினர். 'நாள்தோறும் இரண்டு கழுகுகள் காசியிலிருந்து புறப் பட்டு இராமேசுவரம் சென்று திரும்பும் வழியில் கழுக் குன்றம் வந்து காட்சி தந்துவிட்டுக் காசிக்குச் சென்று விடுமாம்' என்றார் ஒருவர். 'இல்லையில்லை; இரண்டும் இமயமலையிலிருந்து புறப் பட்டுக் கன்னியாகுமரி சென்று நீராடிவிட்டுக் கழுக்குன்றம் வந்து உணவு எடுத்துக்கொண்டு சென்று விடுமாம் என்றார் இன்னொருவர். - 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதே கழுகுகள் வருகின்றனவாம்' - என்றார் மற்றொருவர். - 'இரண்டாயிரம் ஆண்டுகள் என்றென்ன..! இந்தக் கழுகு களுக்கு இறப்பே இல்லையாம். எல்லாக் காலத்திலும் இந்தக்கழுகுகளே வருகின்றனவாம்-என்றார் வேறொருவர். 'இவையெல்லாம் உண்மையாக இருக்கமுடியுமா? இந்தக் காலத்திலும் இப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருக்கிறதே! என்று கசந்து கொண்டார் ஒரு பேர்வழி. 'எல்லாம் முழுப் பொய்! வடிகட்டிய மூட நம்பிக்ைைக! எந்தக் கழுகும் எங்கிருந்தும் வரவில்லை - எங்கும் செல்லவு மில்லை. இந்த மலைக்கு எதிரே அதோ இருக்கிறதே ஒரு குன்று! அந்தக் குன்றிலிருந்துதான் கழுகுகள் வருகின்றன - என்று கடிந்து பேசினார் ஒரு வம்பர். எது உண்மை என்று இருந்து பார்த்து விடுவோமே என அன்றிலும் அறவணனும் கழுகுகளை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர்.