பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெதய்விகத் திருமணம் 91 திரளாக வந்துபோகும் மாணாக்கர்கள் மிகப் பலர். டுரிஸ்ட் (Tourist) என்னும் பெயரில் பேருந்து வண்டிகளில் தென்னகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து சுற்றிப் பார்த்து மகிழ்ந்து செல்லும் கிராம மக்களும் நகர மக்களும் மிக மிகப் பலராவர். - இவ்வளவு கூட்டத்திற்கிடையே, வட இந்தியாவிலிருந்து இராமேசுரம் சென்று திரும்பி வரும் வழியில் மகாபலிபுரக் காட்சிகளைக் கண்டு மகிழும் வட இந்திய மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. அங்கும் இங்குமாக வெளி நாட்டு மாந்தர் சிலரும் தமிழரின் சிற்பக்கலைத் திறமையைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். இப்படியாக மக்கள் வெள்ளத்தால் மகாபலிபுரம் நிரம்பி வழிந்து கொண்டி ருந்தது. இந்த வியத்தகு மகாபலிபுரக் கலைக் காட்சி, 'கலைத் தெய்வத்தின் முன்னே, சாதி, சமயம், இனம், மொழி, நிறம், ந்ாடு, ஏழமை. செல்வம் - இன்ன பிற வேறு பாடுகளே கிடையா என்னும் பேருண்மையை மக்கள் குலத்திற்குத் தெளிவாய் விளக்கிக்கொண்டிருந்தது. பல நாட்டவரும் போற்றும் அளவிற்குச் சிற்பக்கலை யில் கைதேர்ந்திருந்த நம் மக்கள், இடையில் அதனைக் கைவிட்ட குற்றத்திற்குக் கழுவாய் தேடிக்கொண்ட முறை யில், இப்போது மகாபலிபுரத்தில் அமைக்கப்பெற்று நடந்து வரும் சிற்பக் கல்லூரி', அறவணன் - அன்றில் போன்றோருக்கு அக மகிழ்வு அளிப்பதில் வியப்பில்லை.