பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சுந்தர சண்முகனார் 9 எம். ஏ. படித்த பேராசிரியர்களாகிய அறவணனும் அன்றிலும் இப்போது பொய்கைக் கரையில் அமர்ந்து, அசைபோடும் ஆவினமாக மாறிவிட்டனர். மற்றவர் பலர் கண்ட மகாபலிபுரக் காட்சி வேறு; இவர்கள் கண்ட மகாபலிபுரமே வேறு. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், மற்றவர் கண்டது மகாபலிபுரம்'; இவர்கள் கண்டதோ மாமல்ல புரம் ஆகும். இவர்கள் இருவரும் கி.பி, இரு பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துகொண்டே - இப்போதுள்ள மகாபலிபுரத்தை ஊனக் கண்ணால் பார்த் துக்கொண்டே - இற்றைக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்குமுன் சென்றுவிட்டனர். குறிப்பாக, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி ஆறாம் நூற்றண்டிலும் ஏழாம் நூற்றாண்டிலும் இருந்த மாமல்லபுரத் காட்சிகள் பல அவர்தம் மனக்கண் முன்பு மாறி மாறித் திரைப்படம் போல் ஒடிக் கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் மாமல்லபுரம், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பேரரசு புரிந்த பல்லவி மன்னர் களின் துறைமுகப் பட்டணமாக இருந்தது. மாமல்லபுரக் கடற்கரையில் பல நாட்டுக் கப்பல்களின் நடமாட்டம் இருந்தது. பல நாட்டுப் பெரு வணிகர்களின் பெரிய வாணிகச் சந்தையாக அன்று மாமல்லபுரம் விளங்கியது என்று கூறினால் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார் களா? அன்றிலும் அறவணனும் இதனை நன்றாக அறிவர். பொய்கைக் கரையில் அமர்ந்து அவர்கள் இது பற்றி உரை யாடிக்கொண்டிருந்த போது,

  • ' புலன்கொள் கிதிக் குவையோடு

புழைக்கைம்மா களிற்றினமும்

  • பெரிய திருமொழி: 2.6.6.