பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 93 கலங்கொள் நவமணிக் குவையும் சுமக்தெங்கும் கன்றொசிந்து கலங்கள் இயங்கும் மல்லைக் கடல் மல்லை' என்னும் திருமங்கையாழ்வாரின் பாடலை அன்றில் அறவணனுக்கு நினைவூட்டினாள். அன்று காஞ்சியிலிருந்து மல்லையெனப்படும் மாமல்லபுரம் வரையும் உள்ள இடைவெளி முழுதும், தொடர்ந்த ஒரு மாபெரு நகரமாக விளங்கியது . என்று சொல்லப்படும் ஒருவகை ஆராய்ச்சிச் செய்தியை அறவணன் அன்றிலுக்கு நினைவூட்டினார், முதலாம் மகேந்திரவர்மன் குன்றுகளைக் குடைந்து குகைக்கோயில்கள் அமைத்த அருமைப்பாடு, அன்றிலால் விவரிக்கப்பட்டது. அவனையடுத்து, மகாபலிபுரத்திற்கு 'மாமல்லபுரம்' என்னும் பெயர் ஏற்படக் காரணமாயிருந்த மாமல்லன்' என்னும் சிறப்புப் பெயர் பூண்ட முதலாம் நரசிம்மவர்ம பல்லவன், தந்தையின் பணியைத் தொடர்ந்து, கருங்கற் பாறைகளிலும் குன்றுகளிலும் நுண்ணிய வேலைப்பாடு மிக்க சிற்பங்கள் பல செதுக்கச் செய்து புரிந்த கலைப்பணியை அறவணன் பெரிதும் பாராட்டினார். அவன் வழிவந்த மன்னர்களால் அந்தக் கலைப்பணி தொடரப்பட்டது அப்போது நினைவு கூரப்பட்டது. சில சமயம், வரலாற்றுக் குறிப்புகள் பற்றி இருவரிடையேயும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதும் உண்டு. இந்த நேரத்தில் இன்னொரு செய்தியைப் பற்றிப் பேசவும் அவர்கள் மறக்கவில்லை. அதுதான் போரின் கொடுமை. சாளுக்கிய மன்னன் புலிகேசி போன்றோருடன் பல்லவ மன்னர்கள் அடிக்கடி போர் புரிய நேர்ந்ததனாலேயே, சிற்பக் கலைப்பணி இடையிடையே நின்றுபோயிற்று. போரிலே சிற்பங்கள் பல சிதைக்கப்பட்டதாகவும் சிலரால் சொல்லப்படுகிறது. சிற்பக் கலைப்பணி சிதறடிக்கப்பட்ட தோடு தமிழகத்தின் தலையெழுத்து நின்றுவிட்டதா என்ன?