பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 95 ዝ O நிலையான அமைதி நீடித்துச் சமாதி நிலையில் இருக்க அன்றிலும் அறவணனும் யோகிகளா என்ன? அமைதிக்கு அன்றில் முதலில் முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கினாள். அறவணனிடம் ஏதோ பேசுவதற்கு வாயெடுத்தாள் . ஆனால், அறவணனின் எண்ணமும் பார்வையும் இணைந்து வேறொரு காட்சியில் ஈடுபட்டு இருந்தன. அன்றில் அறவணனிடம் பேசியும் பார்த்தாள். ஆனால் அறவணன் அவளிடம் பேசாதது மட்டுமன்று-அவள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. அறவணனது நிலை அன்றிலுக்கு முதலில் வியப்பாய் இருந்ததுபோக, பின்னர் வேதனையாக மாறிவிட்டது. "அவர் ஏன் நம்மிடம் பேசவில்லை: நம் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லையே அவர்! இதற்குக் காரணம் என்ன? நம் மேல் ஏதேனும் வெறுப்பா? நாம் ஒரு தவறும் செய்ய வில்லையே! அவர் மனம் புண்படும்படியாக நாம் ஒன்றும் நடந்துகொள்ளவில்லையே! அப்படி நடந்திருந்தால் அவர் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டலாமே! பெண்களின் மனத்தைப் புரிந்துகொள்வது கடினம் என்று ஆண்கள் சொல்வது வழக்கம். ஆனால் ஆண்களின் மனத்தைப் புரிந்து கொள்வதுதான் அருமைபோல் இருக்கிறதே! இப்போது என்ன செய்வது - எப்படி நடந்து கொள்வது என்று ஒன்றுமே புரியவில்லையே' - என்றெல்லாம் அன்றிலின் எண்ண அலைகள் அவள் உள்ளத்தோடு முட்டி மோதிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அன்றிலுக்கு ஒரு காரணம்' நினைவுக்கு வந்தது. அறவணன் தன்னைப்புறக்கணிப்பதற்கு அதுதான் காரணமாயிருக்கலாம் எனக் கருதினாள். அதாவது, மாமல்லபுரத்தின் பழைய வரலாறு குறித்துத்