பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - சுந்தர சண்முகனார் தாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அறவணன் கூறிய கருத்துகள் சிலவற்றைத் தான் மறுத்து வேறு விதமாகக் கூறியது அவரது மனத்தைப் புண்படுத்தி யிருக்கலாம். இப்போது அதை எண்ணித்தான் அவர் நம் மேல் வெறுப்புக் கொண்டிருக்கக் கூடும். அப்படியென்றால், ஆண்கள் சொல்வதைப் பெண்கள் சிறிதும் மறுத்துப் பேசவே கூடாதா? அவருந்தானே நாம் சொன்ன கருத்துகள் சிலவற்றிற்கு மறுப்பு தெரிவித்தார்! அதற்காக நாம் ஒன்றும் வருத்தப்படவில்லையே! ஆணுக்கு ஒரு நீதி - பெண்ணுக்கு ஒரு நீதி என்பது இன்னமுமா? இந்தக் காலத்திலுமா? ஒருவேளை எந்தக் காலத்திலுமே அப்படித்தானோ? அப்படி யென்றால், எதிர்காலத்தில் நாம் ஒர் ஆடவரை மணந்து கொண்டு அவருடன் ஒன்றிவாழ்வது எப்படி?’ என்றெல்லாம் அன்றில் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இப்போது அன்றிலின் மனத்தில் வேறொரு காரணம் புலப்பட்டது. அதாவது:- 'அறவணன், எப்படியாவது வாழ்ந்தால் போதும்-என்ற வகையினரைச் சேர்ந்தவராகத் தெரியவில்லை; 'இப்படித்தான் வாழவேண்டும்'-என்பதொரு குறிக்கோள் வாழ்க்கையுடையவராகவே காணப்படுகிறார். பொதுவாக ஒரளவு கடுமையுடையவராகவே காணப் படுகிறார். முதல் சந்திப்பில் புகைவண்டியில் மேற் கொண்ட கடுமையை, மறுநாள் கல்லூரியில் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) நடைபெற்று முடிந்த பின்னரும் கை விட்டவராகத் தெரியவில்லையல்லவா? இப்போதும் அதே நிலையில் இருக்கின்றார் போலும்! மேலும், உலக நிலையாமையைப்பற்றி இப்போது பெரிய வேதாந்த தத்துவம் பேசினார் ஆகையால், உலகச் சிற்றின்பத்தை வெறுக்கவேண்டும் என்னும் குறிக்கோள் உடையவராய், அக்குறிக்கோளின் ஒர் அடையாளமாகப் பெண்களுடன் பேசக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பார் போலும்!