பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 97 துறவி அறவண அடிகளின் பெயரைப் புதுமையாக வைத் துக் கொண்டிருப்பதிலிருந்தே இவரைப் பற்றி ஒரு சிறிதா யினும் புரிந்து கொள்ள முடிகிறதே! ஆடவர்களுள் சில ‘பைத்தியங்கள்', எப்போதும் பெண்களுடன் சுற்றிக் கொண்டிருப்பதிலும் பெண்களுடன் பேசிக்கொண்டிருப் பதிலும் பேரின்பம் காண்பதுண்டு. வேறு சில பைத்தியங் களுக்கோ, பெண்கள் என்றால் பிடிப்பதில்லை. பெண் களுடன் இருப்பது - பெண்களுடன் பழகுவது - பெண். களுடன்பேசுவது-இவையெல்லாம் வேப்பாங்காய்வெறுப்பு! அறவணப் பைத்தியம் இந்த இனத்தைச் சேர்ந்தது போலும் சரி. நாம் மட்டும் இவருக்கு இளைத்தவளா என்ன? இன்னும் கேட்டால், இந்தவகையில் இவரினும் கடுமையானவள் அல்லவா நாம்? இனி இங்கே - இவருடன் என்ன வேலை? இவர் யார்? நாம் யார்! எழுந்து போவோம் - என்று கன்றிய உள்ளத்துடன் அன்றில் அவ்விடத்தினின்றும் எழுந்தாள், காவிரிப் பூம் பட்டினத்துக் கடற்கரையில் கோவல னுக்கும் மாதவிக்கும் இடையே பிணக்கு ஏற்பட, கோவலன் அவ்விடத்திலிருந்து எழுந்து போனான். இங்கே மாமல்ல புரத்துக் கடற்கரையிலோ, அறவணனோடு பிணக்குக் கொண்டு அன்றில் எழுந்துபோகத் தொடங்கினாள். ஆனால் கோவலனும் மாதவியும் காதலர்கள். அறவண னும் அன்றிலுமோ அப்படியல்லர். நட்பு நிலையில் பிணக்குற்றே அன்றில் எழுந்தாள். அப்போதுதான் அறவணன் திடுக்கிட்டவராய்த் திரும் பிப் பார்த்தார்; அன்றிலின் முகத்தில் பொலிவு குன்றியிருப் பதைக் கண்டு காரணம் தெரியாது விழித்தார்; அன்றிலின் நிலைமையில் மாறுதல் நேர்ந்துள்ளதைக் குறிப்பால் உணர்ந் தார். ஏன், என்னவோபோல் இருக்கிறீர்கள்? ஏன் எழுந்து விட்டீர்கள்? என்னைத் தனியே விட்டு நீங்கள்