பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

தேரில் அழைத்துக்கொண்டு சென்றார். வழியெங்கும் அழகிய பூஞ்சோலைகளும் நீர்நிறைந்து ஓடும் ஆறுகளும் காணுதற்கினிய காட்சிகளாக இருந்தன. பொன்னிறமான முதிர்ந்த நெல் வயல்களும் இன்னிசை பாடிப் பறந்து திரியும் சிறு பறவைகளும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் சித்தார்த்தன். ஓரிடத்திலே தேர் போகும் வழியிலே, ஓர் உழவன் வற்றி மெலிந்த எருது ஒன்றை ஓட்டிக் கொண்டு சென்றான். தார்க்குச்சியினால் அடித்தும் கீறியும் அதன் முதுகில் வரி வரியாகப் புண்கள் நிறைந்திருந்தன. அந்தப் புண்ணின் மேலேயே சற்றும் ஈவிரக்கமின்றி அந்த உழவன் மேலும் மேலும் அடித்து அதை ஓட்டிச் செலுத்திக் கொண்டிருந்தான்.

இந்தத் துன்பக் காட்சியைக் கண்ட சித்தார்த்தனின் உள்ளம் உருகியது. இந்தக் காட்சியைக் காணப் பொறுக்காமல் அவன் கண்களை மூடிக் கொண்டான். “அப்பா! அரண்மனைக்குப் போய்விடுவோம்" என்று கூறினான். மகன் விருப்பத்திற்கு மாற்று மொழி கூறியறியாத சுத்தோதனர் தேரைத் திருப்ப ஆணை பிறப்பித்தார். திரும்பிச் சிறிது தூரம் சென்றவுடன், ஒரு பருந்து ஒரு புறாவைக்