பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

44

பதைபதைக்கச் செய்யும் இது போன்ற காட்சியை சித்தார்த்தன் அதற்கு முன் கண்டதே இல்லை. அந்தக் கிழவனின் நடுக்கமும் துடிப்பும் சித்தார்த்தனின் நெஞ்சை உலுக்கிவிட்டன. இந்த மனிதன் ஏன் இப்படித் துன்புற்றுத் துடிக்கிறான் என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது.

“சாணா, ஏன் இந்த மனிதன் இப்படி யிருக்கிறான்?” என்று தேர்ப்பாகனை நோக்கிக் கேட்டான்.

“இளவரசே, இதுதான் முதுமை. இந்தக் கிழவன் உலகில் பல ஆண்டுகள் வாழ்ந்து இப்போது மூப்படைந்துவிட்டான். மூப்பினால் அவன் தளர்ந்து மெலிந்துபோய்விட்டான். மனிதர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகித்தான் தீர வேண்டும்” என்று உலக உண்மையை எடுத்துக் கூறினான் அனுபவசாலியான தேர்ப்பாகன்.

இந்தப் பதிலைக் கேட்டு சித்தார்த்தன் கதி கலங்கிப் போனான். மனிதகுலம் இந்த முதுமைப் பிணிக்கு ஆளாகித்தான் தீரவேண்டுமா என்ற