பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. அந்தக் கிழவனின் தோற்றம் அவன் மனக் கண்ணை விட்டு நெடுநேரம் வரை அகலவேயில்லை. கேளிக்கை மைதானம் சென்ற பிறகும் அவன் இந்தச் சிந்தனை வயப்பட்டவனாகவே யிருந்தான். அரண்மனைக்குத் திரும்பிய பிறகும் சித்தார்த்தனின் முகம் வாட்டத்துடனேயே இருந்தது. அந்தக் கிழவனின் முதுமைத் துன்பம் அவன் மனக் கண்ணை விட்டு அகலாத காட்சியாகவே இருந்தது.

சித்தார்த்தன் இத்துன்ப சிந்தனையில் ஈடுபட்டிருந்த போதே எதிர்பாராத விதமாக சுத்தோதனர் அவனைக் காண நேரிட்டது. மகன் துக்கத்தோடிருப்பதன் காரணத்தை தேர்ப் பாகன் மூலமாக அறிந்தபோது அவர் மனம் கலங்கி விட்டார். இப்படிப்பட்ட துயரக் காட்சிகளைக் காணக் காண மகன் அருளுள்ளம் இளகி அவன் துறவியாகி விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது.

அன்றே அவர் கோட்டை வாயில்களில் புதிய காவலர்களை நிறுத்தினார். இளவரசன் கோட்டையை விட்டு வெளிச் செல்லாதபடி