பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

80

சங்கத்தில் சேர்ந்து விட்டான். இருந்தாலும் சுத்தோதனரின் பணியையும் அவன் மறந்து விட வில்லை.

புத்த பிரானிடம் பல முறை பேசி அவரை கபில வாஸ்துவுக்கு அழைத்து வந்து விட்டான் இரண்டு மாதம் நடந்து புத்த சங்கத்தினர் கபில வாஸ்து நகரை யடைந்தனர். கோட்டைக்கு வெளியே மரத்தடியில் அமைக்கப்பட்ட குடிசைகளில் தங்கினர்.

சுத்தோதன மாமன்னர் புத்த பிரானைச் சந்திக்க வந்தார். மழுங்க வழித்த தலையும் காவி உடையும், கையில் திருவோடுமாகக் காட்சியளித்த அவரைக் கண்டு கண் கலங்கினார். கண்ட மாத்திரத்தில் சுத்தோதனர் தம்மையறி யாமலேயே கை கூப்பி புத்தபிரானை வணங்கினார்.

ஆயிரக் கணக்கான சீடர்கள் பின் தொடர அருள் ஒளி நிரம்பிய திரு முகத்துடன் தன் மகன் ஒரு பெரும் தெய்வம் போலக் காட்சி யளித்தது சுத்தோதனருக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால், அந்தக் காவியுடையும் கைத் திருவோடும் முடியற்ற தலையும் காணப் பொறுக்க வில்லை.