பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

82

துக் கொண்டு அவனுக்கு உண்மை விளக்கம் செய்தார். ராகுலன் அன்று முதல் அவரின் சீடனானான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சுத்தோதனர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து புத்தர் அவரைக் காணச் சென்றார். புத்தரைக் கண்டதும் சுத்தோதனர் மகிழ்ச்சி யடைந்தார். முன்பெல்லாம் தனக்குப் பின் தன் அரசை ஏற்றுக் கொள்ளாமல் மகன் துறவியாகி விட்டானே என்று அவர் வருந்தினார். அப்போதோ, புத்த சங்கத்தில் தம்மையும் சேர்த்துக் கொள்ளும்படி அவர் புத்தபிரானை வேண்டினார். அவ்வாறே புத்த பிரான் சுத்தோதனரைத் தம் சீடராக்கிக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அமைதியுடன் சுத்தோதனர் உலக வாழ்வை நீத்தார்.

பிறகு பிரஜாபதியும், யசோதரையும் வேறு பல சாக்கிய குலத்துப் பெண்மணிகளும் உலக வாழ்வைத் துறந்து புத்த சங்கத்தில் சேர்ந்தார்கள். அதன் பிறகு புத்த சங்கத்தில் பெண்களுக்கும் இடம் ஏற்பட்டது.

புத்தர் ஊரூராகச் சென்று தாம் கண்ட புதிய உண்மைகளை மக்களுக்கு விளக்கிக் கூறினார். நாள் தோறும் புத்த சங்கம் தழைத்து வளர்ந்தது.