பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 47) ஓடுகளப் போட்டிகளில் (Track and Field) பங்கு பெறுகின்ற ஒரு உடலாளர் (Athlete). தான் அணிந்திருக் கின்ற பனியனில் முன்னும் பின்னும்,தனக்குரிய எண்ணை (Number) அணிந்து கொண்டிருந்தால்தான், போட்டியில் பங்கு பெற முடியும். பனியனில் உள்ள எண்ணின் அளவானது 6 அங்குல உயரமும் 1 அங்குல பருமனும்- (மேற்படாமல்) உள்ளதாக அமைந்திருக்க வேண்டும். 48) கபாடி ஆட்டத்திலும், ஒரு குழு ஆட்டக்காரர் களாகிய 7 பேர்களையும் இன்னொரு குழு ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் (Out), அவ்வாறு செய்த குழுவிற்கு 'லோனா என்று, அவரது குறிப்பேட்டில் குறிக்கப்படும்.லோனா பெற்ற குழுவிற்கு 2 வெற்றி எண்கள் அதிகமாகக் கொடுக்கப்படும். கோகோ ஆட்டத்திலும் 'லோனா' உண்டு. ஆனால், அதற்காகத் தனியாக வெற்றி எண்கள் தரப்படுவதில்லை. 49) பெண்கள் கைப்பந்தாட்டத்திலும், முதன் முதலாக அர்ஜுனா' விருது (Arjuna Award) பெற்ற பெண்மணி, ஆந்திராவைச் சேர்ந்த மியூனிலி ரெட்டி (Munili Reddy) என்பவராகும். களை 50) ஒரு தங்கப்பதக்கத்திற்காக நம்நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரே ஒரு இளைஞன் 7 தங்கப்பதக்கங் நீச்சல் போட்டியில் உலகசாதனைகளை நிகழ்த்தி வென்றான். அவ்வீரன் பெயர் மார்க்ஸ் பிட்ஸ், என்பதாகும். அவன் அமெரிக்க நாட்டினன்.