பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரைக. உயர்க வலிமை பெறுக என்பது தான் விளையாட் உலகின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். தான் ஒருமனிதன் அல்லது ஒரு பெண், தனது வலிமை மிகுந்த வாலிப காலத்தில் எந்த அளவு திறமையும் வலிமையும் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து கொள்ள உதவும் வாய்ப்புகள் விளையாட்டுகளாகும். எந்தவித செலவும் இல்லாம லேயே, சுயகட்டுப்பாடுடன், சுய சோதனை செய்து தெரிந்து கொள்கின்ற இனிய வாய்ப்புக்கள் நிறைந்தவை விளையாட்டு களாகும். 'ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு கடல் என்கிற அளவுக்கு விளையாட்டுக்கள் நுணுக்கமானவை; விஞ்ஞான பூர்வமாக வளர்ந்தவை. ஒவ்வொன்றின் அணுகு முறைகளே தனித்தன்மை பெற்றவை என்று உலகத்து அறிஞர்களே ஒத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வெள்ளத்தை வழிப்படுத்தி ஒழுங்குற ஓடச் செய்ய உதவும் கரைகள் போல, விளையாட்டுக்களை வழிநடத்திச் செல்ல விதிமுறைகள் அவ்வப்போது தோன்றியிருக்கின்றன. அவற்றைக் கண்காணிக்க, மேம்படுத்த, தலைமைக் கழகங்கள் அவ்வப்போது உருவாகி இருக்கின்றன. . விளையாட்டுகளில் ஈடுபட்ட வீரர்கள், வீராங்கனைகள் செய்த தியாகங்கள், தீரச்செயல்கள், வெற்றி வாகைகள் A விதண்தடா வாதங்கள், விமரிசனங்கள் பல உள்ளன அவற்றிலே சுவையான செய்திகளையெல்லாம் தொகுத்து. தெரிந்தால் சமயத்தில் உதவும் என்று தலைப்பிட்டு, அழகிய நூலாக உங்கள் கைகளில் அளித்திருக்கிறேன். பல ஆண்டுகளாக, விளையாட்டுத்துறை நூல்கள், எழுதிக் கொண்டு வருகின்ற வேனைகளில் எனக்குத் தெரியாத