பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதே சமயத்தில் தெரிந்த சுவையான நிகழ்ச்சிகளை யெல்லாம்.. சாதனைக் குறிப்புக்களை யெல்லாம் சேர்த்து வைத்திருந்தேன். இன்று பல கேர்வுகளில் பாடமாக வைக்கப் பெறுகின்ற பேற்றினையும்,பல வேலை வாய்ப்பு நிலையங்களில் விளையாட்டு பற்றிய வினாக்கள் எழுப்பிச் சோதிக்கின்ற வாய்ப்பினையும் விளையாட்டுத்துறை பெற்று வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது 1 மாணவர்கள் பொதுமக்கள் இத்தகைய குறிப்புக்களை அறிந்து வைத்துக்கொண்டால் நிச்சயம் சமயத்தில் உதவும். நினைவுகளில் வைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்றால், கட்டாயம் என்று இல்லை. சுவையான செய்திகளைப் படிக்கும் போது. மனதுக்கு சுகமாக இருக்கும். உணர்வு களில் வீரம் பிறக்கும் நாமும் இப்படி இருக்த வேண்டும். என்ற ஓர் இலட்சியம் உதிக்கும் நடைமுறைக்கு இழுத்துக் கொண்டு வருகின்ற விவேகழம் வந்தாலும் வரலாம். ஆக, பல நல்ல சேதிகளைப் படித்துத் தெரிந்து கொள்ள ஒரு நல்ல நூலைப் படித்திருக்கிருேம் என்ற ஒரு திருப்தியாவது. உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே, இந்த நூலை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். மிகவும் அரிதீன் முயன்று தொகுத்தக் குறிப்புக்கள் இவை. விளையாட்டுத்துறையில் இத்தனை செய்திகளா என்று நீங்கள் ஆச்சரியப்படுவதும் எனக்குப் புரிகிறது. தூரத்தில் நிற்கின்ற ஒரு யானையின் துதிக்கை மட்டும் தான் தெரிகிறது என்று ஒருவர் கூறினால், அந்தத் துதிக்கைக்கு உரித்தான யானை எவ்வளவு பெரியது என்று பாரறிவார்? விளையாட்டுகளின் மகத்துவம், யானை பார்த்த குருடர்கள் நிலையில் இன்று இல்லை.