பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 105 கொஞ்சி வரும் அருவியெனக் குளுகுளுக்கும் நடையில் நெஞ்சிருத்தி ஒளியிட்டு நிருத்தியத்து சுதியில் எழுதுகிறேன் கவிதையிதை இளங்கொழுந்தே கேளாய் அழுதழுதே பழுதடைந்த அழுக்கடைந்த மனசில் பூத்தருளிக் காத்தருளிப் புதியஉரம் தந்து கூத்துபல ஆடிநிதம் கோடிவித்தை செய்யும் வையமெல்லாம் மெய்ப்புளகம் வளரவணங்கித் துதிக்கும் தையட்கு நாயகியாம் தாயவளைத் தொழுதே இழுதுகிறேன்! எழுதுகிறேன் இக்கவிதை மானே! எழுந்துவிடு! விழித்துவிடு! இக்கணத்தில் வாழ!