பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 109 இன்பமெனின் எதுவாகும்? - அதுதான் எங்கிருந்து ஓடிவரும்? பொன் சேர்த்தால், புகழ் சேர்த்தால் ஆனந்தம் புரண்டிடுமா வெள்ளமென? கண்குளிக்கும் அழகுக்குள் - யாழிங் கானத்தில் அதுவுண்டா? பெண் அளிக்கும் அரவணைப்பில் - இன்பம் பீறுவதும் உண்மையதா? பளபளக்கும் பட்டுடையில் - சுமக்கும் பவுன்வைர நகைகளிலே கிளுகிளுக்கும் மதுவகையில் - இன்பம் கிளர்த்தெழுதல் மெய்தானா? பகவானின் பேர்பாடும் - பக்திப் பஜனைகளில் அதுவுண்டா? தகவற்ற போர்வெறியில் - எல்லைத் தாண்டுதலில் அதுவுண்டா? எப்போதும் இவைகளிலே -அந்த 'இன்பந் தான் நிலைத்ததிலை ஒப்பற்ற தியாகத்தில் - அன்பின் ஊற்றுகளில் அது பிறக்கும்!