பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் . . 111 ஆத்மாவின் சாகசம் வையத்தை வளர்த்தெடுக்கும் வாழ்வியல் துறைய னைத்தும் கையெடுத்துப் போற்ற கின்றக் கலை எது? விமர்சன ந்தான்! மெய்யதாய் முன்னேற்றத்தை விழைபவர் யாவருக்கும் பொய்மயக்கம் தெளிவிக்கின்ற பொதுமருந்தும் விமர்சனந்தான்! கலைகளாம் நாடகத்தின் - காவிய, இலக்கியத்தின் - சிலை அமைக்கும் வித்த கத்தின் - தீட்டிடும் ஓவியத்தின் - அலையெனப் பொங்கிப் பாயும் அரசியலின் - திரைப்படத்தின் 'நிலைகளில் எல்லாம் புரட்சி’ நிகழ்வதே விமர்சனத்தால்! நிறைவுறும் புலமை ஏந்தி 'நிழல்ஒளி காணுகின்ற அறிஞனைப் புகழ்ந்து யாத்த அனடோல் பிரான்ஸி சொன்னாள் : “அரும்பெரும் விமர்சகன் தன் ஆத்மாவின் சாகசத்தைப் பெரும்பெரும் படைப்பி னோடே பிணைத்திடும் தூயோன் ஆவான்!”