பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 95 பயணம்! வையப் பாலையின் சுணைதேடி வாழ்வுச் சாலையின் முனைநாடி மயங்கி மயங்கி நடக்கின்றேன்! - நான் மாயப் பயணம் தொடர்கின்றேன்! நெய்யோ, திரியோ காணாத - நெஞ்சே தீபத் தூணாகநீளும் நீளும் தொலைவழியில் - நான் நிதமும் நிதமும் அலைகின்றேன்! உண்ண உண்ணப் பசியேற்றும் உறங்க உறங்கத் துயில்திலைக்கும் உடலே உயிரின் சுமையாக - நான். ஒடி ஒடிக் குமைகின்றேன். எண்ண எண்ணக் கண்க்குகளும் எள்ளும் விதியால் பிணக்காத எச்சச் சொச்சமிச்சங்களைப் - புது ஏட்டில் எழுத விரைகின்றேன்!