பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கயிலாசநாதர் கோயில் குரல் கு 3 மொழியிலேயே பொறிக்குமாறு ஏற்பாடு செய்கின்றேன். (காலப் போக்கைக் குறிக்கும் நீண்ட இசை) 1 : பல்லவர் காலத்தில் தோன்றிப் பெருவளர்ச்சி அடைந்தது கைலாசநாதர் கோயில். சாளுக் கியனாகிய விக்கிரமாதித்தன்கூட பகைவனுடைய நாட்டிலே பகைவனால் கட்டப்பட்ட கோயில் என்பதை மறந்து எல்லையற்ற பெருஞ் செல்வத்தை இக்கோயிலுக்கே விட்டுவிட்டுச் சென்றான். இந் நிலையில் பல்லவர் ஆட்சி மறைந்து இடைக்காலச் சோழர்களுடைய ஆட்சி மேலோங்குகிறது. சரித்திரத்தின் போக்கில் மாறுதல்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. -

இக் கோயிலைச் சுற்றிச் சீரும் சிறப்புடனும் விளங்கிய

ஊர் மெள்ளமெள்ள கிழக்கே வளரத் தொடங்கியது. இக்கோயிலை அடுத்துக் காணப்படும் 'கச்சி அநேகதங்காவதம்’ என்ற சுந்தர மூர்த்திகளின் பாடல்பெற்ற திருக்கோயில், பாடல்பெற்ற பெருமையால் சோழர் காலத்தில் தலைதுாக்கத் தொடங்கியது. என்றாலும் சோழர்கள் கயிலாசநாதர் கோயிலை மறக்கவில்லை என்பதற்கு இக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. (கால மணிச் சப்தம்)

இதோ முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு ஒன்று

கயிலாசநாதர் கோயில் முன்மண்டபத்தில் இருக்கிறதே! ஸ்வஸ்திரீ மதிரைகொண்ட கொப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு பதினைஞ்சாவது கச்சிப் பெட்டுப் பெரிய திருக்கற்றளி