பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 91 மகாதேவர்க்கு சண்ட பராக்கிரம மன்றாடி எழுத்து திருக்கற்றளி தெவர்க்கு முந்நூறு நுந்தா விளக்கு........ கு 2 : சரி கல்வெட்டு என்ன கூறுகிறது? கு 3 : இந்தக் கல்வெட்டினால் இக்கோயில் இருக்கும் பகுதிக்குக் கச்சிப்பேடு என்று பெயர் உண்டாகி விட்டது என்றும் கயிலாசநாதர் கோயிலுக்குத் திருக் கற்றளி என்று பெயர் உண்டாகிவிட்டது என்றும் தெரிகின்றது. கு 3 : இன்னும் ஏதாவது கல்வெட்டுகள் இருக்கின்றனவா? கு 4 : கயிலாசநாதர் கோயில் மண்டபம் ஒரு பெரிய ஆவணக்களரி அல்லவா? இதோ முன்மண்டபத்தின் அடிப்பகுதியில் கோப்பரகேசரிவர்மரின் நாலாவது யாண்டுக் கல்வெட்டு என்று இருக்கின்றது. ஆனால், எந்தச் சோழ மன்னன் இவன் என்று அறியக்கூடவில்லை. கு 1 : இந்தக் கல்வெட்டால் ஏதாவது புதுமையை அறிய முடிகின்றதா? கு 2 : கல்லெடுப்பூரில் உள்ள மக்கள் செலுத்தவேண்டிய கடன்பற்றி இக் கல்வெட்டுப் பேசுகின்றது. கு 3 : இந்த ஊரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்ட தில்லையே! கு 4 : கயிலாசநாதர் கோயிலைக் கட்டவேண்டிய கற்களை எடுத்த ஊராக இருக்கலாம். கல் எடுத்த ஊராகலின் கல் எடுப்பூர் என்று பெயர் பெற்றது. கு 1 : திருச்சுற்றில் உள்ள சிறு கோயில்களில் ஏதாவது கல்வெட்டுகள் உண்டா?