பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கயிலாசநாதர் கோயில் என்று சிறப்பிக்கப்பட்டவன் அவனாகலின், அவனும் இவ்வாறு மாற்றி இருக்க முடியாது. கு 1 : அப்படியானால் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில்தான் இம்மாற்றம் செய்யப்பெற்றிருத்தல் வேண்டும். கு 2 : என்றாலும் உறுதியாக இன்னார்தான் என்று கூறவியலாது. - கு 3 : கொப்பனர் என்பவர்கள் யார்? கு 4 : அவர்கள் விஜயநகரத்தைச் சேர்ந்தவர்கள். விஜயநகர அரசரின் பிரதிநிதிகளாக இங்கிருந்து ஆட்சி செலுத்தினவர்கள். கு 1 : அவர்களா சோழர் காலத்தில் நடைபெற்ற இத் தவற்றைப் போக்கி அதற்கு ஈடுசெய்துள்ளனர்? கு 2 : ஆம்! அதுமட்டுமன்று, அவர்கள் கல்வெட்டுமூலம் கயிலாசநாதர் கோயிலில் உள்ள இறைவனுக்கு எடுதத்து ஆயிரமுடைய நாயனார் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிகின்றது. கு 3 : இப்பெயரே ஓரளவு புதுமையாக இருக்கின்றதே! இதன் பொருள் என்னவோ? கு 4 : இஷிதம் என்ற வடசொல்லுக்கு அம்பறாத் தூணி என்பது பொருள். . . . . . . . கு 1 : அப்படியானால் எடுதம் என்ற சொல் இவிதம் என்ற சொல்லின் திரிபாக இருத்தல் வேண்டும். எடுதத்து ஆயிரம் உடைய நாயனார் என்றால் அம்பறாத் தூணியில் நிறைந்த அம்புகளை உடையவர் என்ற பொருள் இருக்கவேண்டும். கு 2 : இக் கல்வெட்டின்படி பார்த்தால் இடைக் காலத்தில் கயிலாசநாதர் கோயிலுக்கு நேர்ந்த ஒரு நஷ்டத்தைக்