பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 97 கம்பண உடையார் ஆட்சிக் காலத்தில் ஈடு செய்துவிட்டதாகத் தெரிகின்றது. ஆம்! இதேபோலக் கம்பண உடையாரின் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாவது கல்வெட்டு கி.பி. 1369ல் தரப்பட்டுள்ளது. இது வீர கம்பன உடையார் காலத்தே செய்யப்பட்டது என்று தெரிகிறது. இக் கல்வெட்டால் கயிலாசநாதர் கோயில் எந்தப் பிராந்தியத்தில் சேர்ந்திருந்தது என்பதும் தெளிவாகின்றது. - ஸ்வஸ்தியூரீ ரீவீர கம்பண உடையார்க்குச் செல்லாநின்ற கீலக வருஷத்து மகர ஞாயற்று அமர பகூடித்து சப்தமியும், செவ்வாய்க்கிழமையும் பெற்றதோர்நாள் ஐயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரங் காஞ்சீபுரத்துடையார் திருக் கற்றளி மகாதேவரான எடுதத்து ஆயிர்முடைய நாயனார் கோயிலில்...... - கு 2 : அப்படியானால், சோழர்காலந்தொட்டு காஞ்சீ கு 3 கு 4: புரத்தை எயிற் கோட்டத்தில் சேர்த்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. : தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சியம் பதி எயிற் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அறிவதே இக்கல்வெட்டின் பயனாகும். இந்தப் பதினான்காம் நூற்றாண்டிலும் கயிலாசநாதர் கோயில் சிறப்புடன் விளங்கியதுபோலும். முற்றிற்று