பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் இரும்பொறை 99 செங் : மந் செங்

இல்லையா அரசே! சேரமான் இரும்பொறை நமது

சிறைப் பாதுகாவலில் இருக்கிறார் என்றால் அது செயற்கரிய செயலன்றி வேறு என்ன? யானை வேட்டுவன் குட்டியையும் சேர்த்துப் பிடித்தது போலச் சேரனைப் பிடித்த நாம், சேர அவைக்களப் புலவர் பொய்கையாரையும் அல்லவா சிறைசெய்திருக்கிறோம். அமைச்சரே! நீர் சேரமான், பொய்கையார் மன நிலையை உணராது பேசுகிறீர். போரில் கொண்ட வெற்றி உண்மையான வெற்றியாகுமா? அதைக் கண்டு மகிழ்வது எவ்வளவு தவறு.

அரசே! அவ்வாறானால்.

போர் என்பது சூதாட்டந்தானே. இச்சூதாட்டத்தில் கண்ட வெற்றிக்கு நமது வன்மையை உயர்த்திப் பேசுதல் தகுமா? அவ்வளவு எளிதாகப் புலவரைக் கூறிவிட்டீரே, புலவரை எவ்வளவு தூரம் நீர் சிறை செய்திருக்கிறீர் என்பதை இதோ கண்கூடாகக் காட்டுகிறேன் பாரும். யாரங்கே... சேவகன் : உத்தரவு மகாராஜா. செங் : சேவ : செங் சிறைக்கூடம் சென்று போரில் சிறை செய்யப்பட்ட புலவர் பொய்கையாரை அழைத்து வா. உம், தகுந்த மரியாதையுடன் அழைத்துவர வேண்டும். என்ன, தெரிந்ததா? உத்தரவு மகாராஜா. - - அமைச்சரே நமக்கு வெற்றி கிட்டிவிட்டது என்பதற்காகப் பகையை இழித்துப் பேசுதல் தகாது. அதிலும், சேரமான் இரும்பொறையைப் போன்ற வீர புருஷனையும், பொய்கையாரைப் போன்ற உத்தமப் புலவரையும் இடித்துக் கூறுதல் அறவே கூடாது.