பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சேரமான் இரும்பொறை விட்டதாகக் கொக்கரிக்கிறீர்கள். நன்கு ஆராய்ந்து பார். உண்மை விளங்கும். யான் சென்று வருகிறேன். (புலவர் பொய்கையார் சிறைக்குத் திரும்பிச் செல்கிறார்) செங் : அமைச்சரே! இப்போது தெரிந்துகொண்டீரா தமிழ்ப் புலவன் மான உணர்ச்சியை, இத்தகைய ஞானிகள் எங்கிருந்தால் என்ன, அது சிறைக்கூட மானாலும் அறக்கூடமாகவன்றோ மாறும். மந் : அரசே, என்னை மன்னிக்கவேண்டும். புலவர் கூறியதன் பொருள் எனக்கு இப்பொழுதுதான் புலப் படுகிறது. செங் : ஒளவையார் பாடிய ஒரு பாடல் என் நினைவுக்கு .x வருகிறதுییم மந் : எந்தப் பாடலைச் சொல்லுகிறீர்கள்? அரசே, செங் : நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும், பள்ள மானாலும் மேட்டு நிலமானாலும் எங்கே நல்லவர்க ளிருக்கிறார்களோ அந்த இடமே நல்ல நாடு ஆகும். ஒளவை மூதாட்டியின் பாடல் சிறப்பை என்னென்று சொல்வது. - மந் : உண்மை அரசே இவ்வளவையும் கண்டபிறகு அச் சேரமான் இரும்பொறையைக் கண்டு அவர் மனநிலையையும் காணவேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.