பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ம் சேரமான் இரும்பொறை சேர : ஒஹோ, இது சோழன் செங்கணான் சிறைக்கூடமல்லவா? நான் எப்படி இங்கு வந்தேன்? தாங்களும் எப்படி..? பொய்கை : எப்படி வந்தாயா? முந்தையநாள் போரில். சேர : சரி சரி. முந்தையநாள் போரில் தோற்றுவிட்டேன்; உயிரையும் விடவில்லை. எனக்கு ஏற்ற இடம் இச் சிறைக்கூடந்தான். நான் கோழை. பொய்கை : இரும்பொறை என்ன உளறுகிறாய்? யார் உன்னைக் கோழை என்று கூறினார்? சேர : ஒருவர் கூறவேண்டுமா ஐயனே. பார்க்கப் போனால், சோழன் செங்கணான்தான் கூறினான். பொய்கை : எப்பொழுது? எனக்குத் தெரியாதே? சேர எப்பொழுதா? என்னைச் சிறையில் அடைத்த அப்பொழுதே. கோழைக்கு ஏற்ற இடம் அரண் மனை அன்று, சிறைக்கூடம் என்பதனால் தானே என்னை இங்கே அடைத்தான். பொய்கை : சேரமானே! இங்கே இருப்பதால் ஒருவனைக் கோழை என்று கூறிவிட முடியுமா? சேர : கூறாமல் என்ன? போரில் வெற்றி: இன்றேல் சாவு. இவ்வுண்மையை மறந்தவன் கோழை. அவனுக்கு ஏற்ற இடம் சிறைதான். சி! மானம் இழந்த இவ் வாழ்வு ஏன் இன்னும் இருக்கிறதோ தெரியவில்லை. பொய்கை : கணைக்காலா! போராகிய சூதாட்டத்தில் வெற்றியுந் தோல்வியும் இயல்புதானே. இதற்கும் மானத்திற்கும் என்ன தொடர்பு? சேர சரிதான் ஐயனே, நல்ல அறிவு புகட்டினர். உமக்கு மிகுந்த நன்றி. போரில் தோற்ற எனக்குத் தகுந்த இடம் சிறை என்று சோழன் காட்டினான். சோழன்