பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் இரும்பொறை ( 105 சேவகன், மானமிழந்தவன் தண்ணிர் கேட்கக்கூட உரிமையிழந்தவன் என்பதை எடுத்துக்காட்டினான். ஆஹா! எவ்வளவு மறதி. முன்பு ஒருமுறை நமது புலவர் பெருந்தகை பொய்கையார், 'மானம் இழந்த பின் வாழாமை முன் இனிதே என்று கூறியுள்ளார். இத் தண்ணிரைப் பருகி, மானத்தை இழந்து, உயிர் வாழ்வதைவிட, உயிர் விடுவது எவ்வளவோ சிறந்தது. (திடீரென மயங்கிக் கீழே விழுகிறான்) சேவ 2 : அடே தம்பி, ஓடு ஒடு; அரசரிடம் சென்று இவர் செங் மந் : சேர : செங் மயக்கமா விழுந்துவிட்டார்னு சொல்லு. ஒடு. இதையறிந்த செங்கணானும் மந்திரியும் ஒடி வருகின்றனர். செங்கணான் கீழே விழுந்துகிடக்கும் சேரமானைத் தூக்கித் தன் மார்பின்மீது சார்த்திக் கொள்கிறார்) - : சேரமானே, மன்னர் மன்னரே, எங்கே கண்ணை விழியுங்கள். என்னைப் பாருங்கள், நான் தான் சோழன் செங்கணான். அரசே! தண்ணிர் கேட்டீர்களே? இதோ, தண்ணிர், அருந்துங்கள். (கொஞ்சம் மயக்கம் தெளிகிறது) இதோ, தண்ணிர். - யார்? சோழரா, நன்று நன்று. தண்ணிரா? வேண்டா. தமிழன் மரபு எப்படிப்பட்டது? குழந்தை இறந்தே பிறந்தாலும் தசைப் பிண்டமாகவே பிறந்தாலும் கூடப் புதைப்பது இல்லையே. வீரச் சாவு அடையவேண்டும் என்பதற்காக அதனை வாளால் வெட்டி அல்லவா புதைப்பார்கள். அந்த மரபில் தோன்றிய யான், ஆஹா! என்ன நிலை? -

அரசே! வருந்தாதீர்கள். தாங்களும் அந்த மரபில் தோன்றியவர்தாமே? ஏன் கவலை அடைகிறீர்கள்?