பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு நாடக பாத்திரங்கள் நெடுஞ்செழியன் சோழமன்னன் சேரமான் இரும்பொறை சோழ தூதுவன். வீர பாண்டியன் நல்லினி வில்லவன்கோதை நற்சோணை மாங்குடி மருதனார் ஒற்றன்-1 குறுங்கோழியூர் கிழ்ார் ஒற்றன்-2 Ց56ն}6}ITԼ-T §ss6.Jól)6 of அங்கம்-1 காட்சி-1 (சேரர் தலைநகரான வஞ்சிமாநகரில் சேரன் அரண்மனை. சேரமான் இரும்பொறை அத்தாணி மண்டபத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளான். யானைத் தந்தம் இரண்டு பின்புறம் இருக்கின்றன. அமைச்சன் வில்லவன் கோதை அரசனுக்கு வலப்புறம் அமர்ந்துள்ளான். ஏனைய அமைச்சரும் வீரரும் நிற்கின்றனர். சேரமான் இரும்பொறை நல்ல உயரமும் கட்டுடலும் உடையவன்; வயது நாற்பதுக்குமேல். அமைச்சன் வில்லவன் கோதை ஐம்பது வயதுக்கு மேற்பட்டவன்; கட்டுடல் வர்ய்ந்தவன். அவனது அமைதியான முகம் பொலிவுடன் விளங்குகிறது. அவன் எதனையும் ஆய்ந்து செய்பவன் என்பதை அவனது நெற்றிச் சுருக்கம் காட்டுகிறது. கோழியூர் கிழார் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்; அகன்ற நெற்றியும் கவிஞருக்குரிய