பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 109 வி. கோ : அரசே, பகையை இளமையிலேயே அழிக்க வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அதே அறநூல் பகைவர்ளை அழிக்கக் காலம், இடம் - - • 2- . 1 y & முதலியன பார்க்கவேண்டும்' என்றும் கூறுகிறதே? முள்மரத்தை வெட்டப்போய்க் கோடரியையே உடைத்து விடுவது நகைப்புக்கு இடமாகும். மேலும், நெடுஞ்செழியன் நமக்கென்ன தீமை செய்து விட்டான்? என்ன காரணம் கூறி அவன்மேல் போருக்கு எழுவது? இ. பொ : என்ன தீமை செய்துவிட்டான் என்றா கேட்கிறீர்? நம் அவைக்களப் புலவர் குறுங்கோழியூர் கிழாரிடம் அவன் என்ன கூறினான் என்பது தெரியுமா? தெரிந்தால், இப்படிப் பேசமாட்டீர்! ஆணவத்தின் எல்லையில் நின்று அந்தச் சிறுவன் பேசிய பேச்சுக்களை இப்பொழுது நினைத்தாலும் குருதி கொதிக்கிறது! வி. கோ : நீங்கள் கோபப்படுவதற்கு ஏதுவாகப் புலவர் எதுவும் கூறியதாக எனக்கு நினைவில்லை. என்னதான் கூறினார் ? சற்று விளக்கமாகவே கூறுங்கள். இ. பொ : நம் புலவர் குறுங்கோழியூர் கிழார் மதுரை சென்ற பொழுது பாண்டியனையும் பார்த்து விட்டு வரலாம் என்ற கருத்துடன் நெடுஞ்செழியன் அவைக்களம் சென்றாராம். மாங்குடி மருதனார், குடபுலவியனார், கல்லாடனார் முதலிய புலவர்கள் புடைசூழ வீற்றிருந்தானாம் அந்தச் சிறுவன்! - வி. கோ : அரசே, தமிழ் வளர்த்த மதுரையிலே புலவர்கட்கு என்ன குறை? புலவர்கள் சூழ்ந்து இருப்பது ஒரு தவறா என்ன? 1. குறள், அதிகாரங்கள், 49, 50.