பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 செழியன் துறவு இ. பொ : அதற்குக் கூறவில்லை நாம்! இந்தப் புலவர்கள் சூழ்ந்தவுடன் செருக்கு மிகுந்துவிட்டது அவனுக்கு: யாரோ ஒரு புலவன் சோழ நாட்டிலிருந்து வந்தானாம். முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய தமிழ்நாடு என்னும் பொருள் தோன்றும்படி ஒரு பாடல் பாடினானாம். உடனே செழியன் ஏளனமாகச் சிரித்தானாம். என்ன சொல்கிறீர் இப்பொழுது? வி. கோ : அரசே, இதை நம்ப முடியவில்லையே! செழியன் சிறந்த தமிழ்ப் புலவன். அவன் ஒரு கவிஞனுங்கூட. அப்படி இருக்க ஒரு புலவன் பாடலைக் கேட்டு அவன் நகையாடினான் என்பது பொருத்தமாய் இல்லையே! இ. பொ : உமக்கு இன்னும் விளங்கவில்லையா? இப்படித்தான் அந்தப் புலவனும் விழித்தானாம். உடனே அந்தச் சிறுவன் புலவனை நோக்கிப் ‘புலவரே, அடுத்தமுறை நீர் இங்கு வரும்பொழுது இந்த்ப் பாடற்பொருளைப் பொய்யாக்கிவிடு கிறேன்! என்றானாம். மூவர் இருந்தால்தானே மூவர்க்கும் உரிய தமிழ் நாடு என்று கூறமுடியும்? நம்மையும் சோழனையும் ஒழித்துவிடப் போகிறானாம்! பாவம்! வேப்பமாலைக்கு வெறிதட்டி விட்டது! வில்லின் ஆற்றலை வேப்பமாலை விரைவில் அறிந்துகொள்ளுமாறு செய்து விடுகிறேன். வி. கோ : அரசே, பதற்றம் வேண்டா. சிறுபிள்ளைத்தனத் தால் பாண்டியன் இவ்வாறு கூறினான் என்று நான் நினைக்கவில்லை. தக்க பலம் இல்லாமல் இவ்வாறு, நம்முடைய புலவர் முன்னிலையில் கூறியிருக்க மாட்டான். எதற்கும் அவன் படை பலத்தைப் பற்றிய