பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 111 உளவை விரைவில் அறிந்துகொள்கிறேன். நீங்கள் இவற்றை எல்லாம் மறந்துவிடுங்கள். இ. பொ : வில்லவன்கோதை, என்ன சொன்னிர்! மறப்பதா? எதை மறப்பது.? நமது குல மானத்தையா, அல்லது அந்தச் சிறு பேதையின் செருக்கையா? இமயவரம்பன் பரம்பரையில் வந்தவன் அல்லவா நான் ? மறப்பதாவது! இந்த உடம்பில் உயிர் ஊசலாடும்வரை மறப்பது என்பது இல்லை! இதை நீர் மறந்துவிடாதீர்! - - காவலன் ஒருவன் வருகிறான்) காவலன் : அரசே, புலவர் குறுங்கோழியூர் கிழார் - வந்துள்ளார். - இ. பொ : என்னடா பேதை! புலவர் வந்தால் உள்ளே அழைத்து வராமல், உத்தரவு கேட்கவா வந்தாய்? உடனே வரச்சொல்! (புலவர் பாடிக்கொண்டு வருகிறார்) கு. கிழார் : திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் உண்ணும் செம்மல் ! நின்னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே! அம்புதுஞ்சும் கடி அரணால் அறம்துஞ்சும் செங்கோலையே! புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை ! அனையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே ' இ. பொ : இருக்கையினின்றும் எழுந்து கூப்பிய கையுடன்) வருக! வருக! புலவர் மணியே, உங்களைப் 1. புறம் 20