பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 செழியன் துறவு பற்றித்தான் இதுவரை பேசிக்கொண்டிருந்தோம். “மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே!’ என்று பாடினிர்களே, நான் என்ன அவ்வளவு கொடியவனா? மக்கள் என்னைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? கு. கிழார் : இரும்பொறையீர், பாட்டு முழுவதையும் விட்டுவிட்டு ஏன் இந்த ஒர் அடியைமட்டும் பிடித்துக் கொண்டீர்? உம் பகைவர்கள் அழியும்படிச் செய்து அவர்கள் மண்ணை நீர் கவர்கிறீர். ஆனால், உம் மண்ணைப் பிறர் விரும்பி உண்கிறார்கள் என்று கூறினேனே! கவனிக்கவில்லையா? இ. பொ : கிழாரே, என் மண்ணைப் பிறர் அபகரிக்கவாவது, உண்ணவாவது! ஒன்றும் விளங்கவில்லையே! கு. கிழார் : ஆம் அரசே, சூல்கொண்ட பெண்கள் மசக்கைக் காலத்தில் மண்ணை விரும்பி உண்பார்களாம். சேர நாட்டுப் பெண்கள் மசக்கையில் மண் தின்ன விரும்பினால் உம் நாட்டு மண்ணைத் தானே உண்ண முடியும்? - ...' இ. பொ : (சிரித்து சரி சரி! புலவரே, அவர்கள் உண்ணுவதை நாம் தடை செய்ய இயலாது, பிறகு என்ன கூறினரீர்? . - கு. கிழார் : மிகுந்த பாதுகாவலை உடையது உமது நாடு என்றேன். அப்படி இருந்தும், உயிர்கள் உம் பொருட்டு அஞ்சுகின்றன என்றேன். - இது கிடக்கட்டும். என்னைப்பற்றி நீங்கள் என்ன பேசினர்கள்? - - - - இ. பொ.: சரி புலவரே, தக்க சந்தர்ப்பத்திலேதான் நீரும் வந்தீர். நம் அமைச்சருக்குப் பாண்டியன் நெடுஞ் செழியன் பெயரைக் கேட்டதும் பெரிய நடுக்கத்தை