பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 115 இ. பொ : வில்லவன் கோதை, இனி எண்ணவேண்டுவது ஒன்றுமில்லை. நம் படைகள் தயாராகட்டும். இன்னும் மூன்று நாட்களில் நான் செழியனுடன் போருக்கு எழுகிறேன். உடனே அதற்கு வேண்டுவன செய்யுங்கள். வி. கோ : அப்படியே. இ. பொ : புலவரே, நீர் நம் அருமை மகள் நல்லினிக்குத் துணையாக நாட்டில் இருந்துவாரும். நான் விரைவில் வெற்றிமாலை சூடி வருகிறேன். (சேரன் மகள் நல்லினி வலப்புறமிருந்து உள்ளே வருகிறாள்.) நல்லினி : என்ன அப்பா, பெரிய மந்திராலோசனை நடை பெறுகிறது போலிருக்கிறதே! - இ. பொ : வா அம்மா, உன்னைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். உட்கார். அரசன் வலப்புறம் நல்லினி அமர்கிறாள்) நல் : அமைச்சர் என்றும் புன்முறுவல் தவழ இருப்பவர், இன்று பேய் அறைந்தவர்போலக் காாட்சி அளிக்கிறாரே! கவிஞர்கட முகமலர்ச்சி இன்றி இருக்கிறாரே! ஏதேனும் கெட்ட செய்தி உண்டா - அப்பா? - இ. பொ : கெட்ட செய்தியா? நமக்கு ஏன் கெட்ட செய்தி வரப்போகிறது; துன்பம் வருவதற்குள் நாமே அதனை எதிர்த்துச்சென்று அதனை முறியடித்து விட்டால், துன்பம் நம்மை என்ன அம்மா செய்யும் 3' 1. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்புைக்கு இடும்பை படாஅ தவர். -குறள், 622.