பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 செழியன் துறவு நல் ஆம் அப்பா! 'எடுத்த காரியத்தில் எருது போல உழைக்கக்கூடிய ஒருவனைத் துன்பம் 574- வந்தால், அத் துன்பத்திற்குத்தான் கேடுகாலம்!" என அறநூல் கூறுகிறது. உங்கள் முயற்சியும் வலிமையும் உலகமெல்லாம் அறிந்தன அல்லவா! நமக்கு ஏன் இடுக்கண் வரப்போகிறது! இ. பொ : நீயே இவர்களுக்கு எடுத்துக்கூறு. பாண்டியன் பெயரைப் பகர்ந்தாலே பதறிவிடுகிறார் நம் அமைச்சர். அதற்குச் சரி கூறுகிறார் கவிஞர் பிரானார். இவர்களை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது! - நல் : என்ன அமைச்சரே, பாண்டியர் நெடுஞ்செழியர் நல்லவராமே! கற்ற கவிஞருமாமே! அப்படியாயின், அவர் பெயரைக்கேட்டு நடுங்குவானேன்? வி. கோ : இளவரசியாரே, வணக்கம்! பாண்டியனுடைய கவித்திறமைபற்றி நம் அரசர் பேசினால் நான் ஏன் மறுத்துக் கூறப்போகிறேன்? அவனிடம் போருக்குப் புறப்படவேண்டும் என்பது அரசர் ஆணை. அதுவும் மூன்று நாட்களுக்குள் நிகழவேண்டுமாம். இ. பொ இதில் தவறு என்ன? நீயே கூறு அம்மா. வி. கோ : சோழனை எதிர்த்துச் செய்த போரின் களைப்பு இன்னும் தீரவில்லை. அதற்குள் சோழனைவிடப் பன்மடங்கு பலமுடைய பாண்டியனை எதிர்க்க வேண்டுமாம். அஞ்சாமல் என் செய்வது? 'உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்' என்பது அறநூல். 1. குறள், 624. -- - 2. குறள், 473.