பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 117 இ. பொ : வில்லவன்கோதை, போதும் உம்முடைய நல் : உபதேசம் ! நீர் கூறுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், வீரனும் கோழையாகிவிடுவான்! நீர் இவ்வளவு அஞ்சுகிறபடியால், யான்மட்டும் சென்று பாண்டியனுக்கு அறிவு கொளுத்திவருகிறேன். அப்பா, அமைச்சர் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது போலத் தோன்றுகிறது.அமைச்சருடைய கடமையை அவர் செய்கிறார். அவர் கருத்துப்படி இன்னும் சிறிது ஆராய்ந்து செய்தால் போகிறது! - இ. பொ. நல்லினி, நீ இன்னும் குழந்தைதானே? எந்த நல் முடிவுக்கும் வர உன்னால் ஆகாது. இதில் நீ தலையிட வேண்டா. இந்தப் பாண்டியப்பதருக்கு உன்னை மணம் முடிக்கலாம் என்று கூட ஒரு காலத்தில் நான் கருதினேன். என்ன அறியாமை!

பெண்ணுக்குக் கணவனைத் தேடப்போகும் முறை

இதுதானா அப்பா? சரி. நீங்கள் சென்றே தீர வேண்டும் என்றால், நானும் உடன் வருகிறேன். நான் வருவது உங்கட்கு உதவியாகும். இ. பொ : வேண்டா அம்மா, நீண்ட நாள் தங்குவதாயின், நீயும் வருவது சரி. ஆனால், இந்தப் போர் இரண்டொரு நாட்களுக்குமேல் நீடிக்காது. நீ இங்கேயே இரு கவிஞரும் உனக்குத் துணையாய் இருப்பார் - அமைச்சரே, அனைத்தும் தயாராகட்டும். 費 蜜 褒 அங்கம்- காட்சி-2 (சேரன் அரண்மனையில் ஓர் அறை. கவிஞர் குறுங் கோழியூர் கிழார் உயர்ந்த இடத்திலும், இளவரசி சற்றுத் தாழ்ந்த பீடத்திலும் அமர்ந்துள்ளனர். இளவரசியின்