பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 119 அவசரமான செய்தி கொண்டுவந்து காத்திருக் கிறான். நல் : அப்படியா! உடனே அவனைவரச்சொல். - (காவலன் போகிறான். ஒற்றன் வந்து விழுந்து வணங்கி எழுந்து கைகூப்பி) ஒற்றன் : வணக்கம்! வி. கோ : போர் முனையிலிருந்து வருகிறாயா? போர் என்ன நிலையிலிருக்கிறது? (ஒற்றன் கவலை தேங்கிய முகத்துடன் ஒன்றும் பேசாதிருக்கிறான்) நல் : உடனே சொல்! ஏன் தயங்குகிறாய்? அரசருக்குத் தீங்குண்டா? ஒற்றன் : சேரநாட்டுப் படை தோற்றுவிட்டது என்பது மட்டும் அன்றி, முறியடிக்கப்பட்டது என்றும் சொல்லவேண்டும். நம் அரசர் இறுதிவரைப் போர் செய்து முடிவில் பாண்டியனோடு தனிப்போரும் நடத்தினார். முடிவில். வி. கோ : முடிவை உடனே சொல்! அரசருக்குத்தீங்கு ஏதாவது நேர்ந்துவிட்டதா? - ஒற்றன் : உயிருக்குத் தீங்கு ஒன்றும் ல்லை. ஆனால், அரசர் பாண்டியனால் சிறையிடப்பட்டு இப்பொழுது பாண்டிநாட்டுச் சிறையில் இருக்கிறார். எப்படி யேனும் சேரநாட்டு மானத்தைக் காக்கத் தம்மை விடுதலை செய்யவேண்டுவது இளவரசியார் பொறுப்பு என்று கூறச் சொன்னார். - நல் : (அழுகையுடன்) ஆ! அப்பா! சேரர் குலக்கொழுந்தே! அரியணை அன்றி வேறு இருக்கை அறியாத நீங்களா சிறையில் கிடந்து வதங்குவது! நான் பிறந்தும் பயனில்லாது போய்விட்டதே! அமைச்சரே, உடனே தெ.ந.-9