பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 செழியன் துறவு புதுப் படையுடன் நாம் போய்த் தந்தையாரை விடுதலைசெய்ய வேண்டும் ! எல்லாம் சித்த மாகட்டும் ! - - வி. கோ : நல்லது ஒற்றா, நீ போகலாம். (ஒற்றன் மீண்டும் வணங்கிப் போகிறான்) இளவரசியீர், ஒரு வார்த்தை; தந்தையாரைப்போலவே நீங்களும் அவசரப் படுவதால் பயன் என்ன? ஆற அமரச் சிந்திக்க வேண்டிய காரியத்தை ஒரு நொடியில் முடிவு செய்துவிடுவதா? - நல் : அமைச்சரே, அங்கு அரசர் சிறையில் கிடந்து வாடுகிறார். இங்கு நாம் ஆற அமரப் பல நாட்கள் சிந்திப்பதா? உடனே வேலை செய்யத் தொடங் கினாற்கூடப் பல நாட்கள் ஆகிவிடுமே? - வி. கோ : இளவரசியீர், மன்னிக்கவேண்டும்! உங்கள் உத்தரவுப்படி நானும் புறப்பட்டால் பாண்டியன் சிறைக்கூடம் நம்மையும் வரவேற்பதைத் தவிர வேறு பயன் காணமுடியாது. நாளை நான் இதற்கு ஒரு வழி கூறுகிறேன். -- கு. கிழார் : அம்மா, நல்லினி, அமைச்சருடைய அரச அன்பு நம்முடையதைவிடக் குறைந்ததன்று. அவர் கூறும் முடிவுப்படியேதான் நாம் நடந்து கொள்ளவேண்டும். உடனடியாகப் படை கொண்டு செல்வது பயனற்ற காரியம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். - * * - * - அங்கம்-1 காட்சி-3 (பாண்டியன் தலைநகரான மதுரை. பாண்டியன் அரண்மனையில் கொலு மண்டபம். நெடுஞ்செழியன் மீனக்கொடி பின்புறம் அழகு செய்யக் கொலுவில் வீற்றிருக்கிறான். அவன் வயது 20-க்கு மேல் 25-க்குள்