பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 செழியன் துறவு விடப் பெரிய புலவர்; கவிஞர். என்றாலும், அவர் பிறருக்கு அச்சத்தை உண்டாக்குவதில்லை! மா. ம. ; புலவரே, உங்கள் புகழுரைக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் போர்க்களம் சென்று போரைப் பார்வையிட்டதாக அரசர் கூறினார். அஃது உண்மையா? கல்லாட : ஆம்; நம் அரசரோ இளையரர். சேரனோ, பல போர்கள் செய்து அனுபவம் பெற்றவன். எனவே, முடிவு என்ன ஆகுமோ என்று அஞ்சிப் போரைக் காணச் சென்றேன். ஆனால், இறுதி வரை அங்கு இருக்க முடியவில்லை. முடிவு. மா. ம. ; இதோ முடிவை நீங்களே காணலாம். அதோ விலங்கிட்டுக் கொணரப்படுகின்றவரே சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை! (இடப்புறமிருந்து விலங்கிட்ட கைகளுடன் சேரன் கொண்டு வரப்படுகிறான். சேவகர் மூவர் உடன் வருகின்றனர்) நெ. செ : சேர வேந்தே, வருக! வருக! அட! இது யார் இட்ட கட்டளை? ஏன் விலங்கிட்டீர்கள்? சேர வேந்தர் என்பதை மறந்து யார் விலங்கிட்டது இவருக்கு? உடனே விலங்கைக் களையுங்கள்! (விலங்கு அவிழ்க்கப்படுகிறது) காவலன் : மன்னர் மன்னரே, இவர் சிறையிலிருந்து இங்கு வர மறுத்தார். ஆகவேதான் வில்ங்கிட நேரிட்டது. நெ. செ: சேர வேந்தரே, அமர வேண்டுகிறேன். (வலப்புறம் - உள்ள இருக்கையைக் காட்டுகிறான்) பாண்டியர் உபசரிப்பை ஏற்றுக்கொள்ள நீங்கள் மேற்கொண்ட வழி விந்தையானதுதான்! என் மீது என்ன குற்றம்