பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 123 கண்டு பகைத்தீர்கள்? படை எடுக்கும்படி அவ்வளவு பெரிய குற்றம் யான் என்ன செய்துவிட்டேன்? இ. பொ : இளையவனே, வெற்றி எக்களிப்பு உன்னை [ዐII... இவ்வாறு பேசத் தூண்டுகிறது! அளவுக்கு மிஞ்சிய செருக்கு என்றும் நன்மை பயவாது. ம : சேர மன்னரே, நெடுஞ்செழியர் எவ்வளவு அன்புடனும் ஆதரவுடனும் பேசுகிறார்? நீங்கள் அவரை இழித்துப் பேச அவசியம் ஏது? இ. பொ : நீர் ஏன் பாண்டியனுக்குப் பரிந்து பேசமாட்டீர்? நெ. பொருளுக்குக் கவி பாடும் புலவர் அல்லவா நீர்? உம் மன்னன், மாங்குடி மருதனார் என்று உம்மை உயர்த்திப் பேசினாலும் உண்மை இதுதானே? செ : சேரர் பெருமானே, தமிழ் மொழியின் ஆபரணங்களுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு' என்ற நூலை நீவிர் தொகுப்பித்தீர் என்று கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை! இவ் அருங்காரியத்தைச் செய்த உம்மைப் பெரிய அறிஞர் என்று மதித்திருந்தேன். ஆனால், நீவிர் புலவரை அவமதிக்கும் தன்மையுடையவர் என்று கருத வில்லை. இப்போதாவது உமது பிழைக்கு இரங்குவீராயின், உம்மைச் சேர நாட்டுக்கு இன்றே அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். இன்றேல். இ. பொ : செழியனே, பிழை செய்தால் அல்லவோ வருந்த வேண்டும்? உனக்கு மனவாற்றல் உண்டாயின், சிறையில் வைத்துப் பார்க்கலாமே! நெ. செ : யாரங்கே: காவ : (உள்ளே வந்து வணங்கி) உத்தரவு. நெ. செ : சேர மன்னரைச் சிறைக்கு அழைத்துச்செல். யாரும் என் ஆணையின்றி இவரைக் காணல் கூடாது! ஆம்! அழைத்துச் செல்.