பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் செழியன் துறவு காவ : ஆணை அரசே அப்படியே. (சேரனை அழைத்துக்கொண்டு காவலன் செல்கிறான்) நெ. செ : சேரவேந்தர் இவ்வளவு அறியாமையும் மமதையும் உள்ளவர் என்று நான் கருதவே இல்லை ! பட்டபொழுதும் அறிவு பெறாதவர் உலகிடை அரசராய் இருக்க அருகதை இல்லாதவரே. கல்லாட ஆயினும், அவரைப் பேரரசருக்குரிய மரியாதை யுடன் நடத்தவேண்டுமென்று ஆணையிட்ட உங்களை நான் என்றென்றும் புகழ்வேன். தம் நிலைமையை அறிந்துகொள்ளாத அவரை இன்னும் எவ்வளவு காலம் சிறை வைத்திருப்பீர்கள்? நெ செ: புலவர் பெருமக்களே, சேர நாட்டிலிருந்து நேற்று மாலை வந்த ஒற்றன் கொண்டுவந்த செய்தியைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மா. ம. : (வியப்புடன்) மன்னரே, நாங்கள் அதை அறியலாமா? நெ. செ: உங்கட்குக் கூறாமல் என்ன? சேரன் மகள் நல்லினி போர்ப் பயிற்சி பெற்றுப் போர்க்களம் செல்லும் இய்ல்பினளாம். அவளும் அமைச்சர் வில்லவன் கோதையும் பாண்டி நாட்டுக்கு மீண்டும் படையோடு வந்து சேர மன்னரை மீட்டுப்போகப் போகிறார்களாம். வஞ்சிமாநகர் முழுவதும் இதே பேச்சாய் இருக்கிறதாம். - கல்லாட : என்ன! பெண் போர்க்களம் புகுவதா! தமிழ் மகள் செய்யும் செயலா இது! - நெ. செ ஆம் புலவரே, அவசியம் என்று கருதும் போது வழக்கத்துக்குக் கட்டுப்பட முடியுமா? நாம் இன்னொரு படையெடுப்பை எதிர்பார்ப்போம்.